ஒஸ்கார் 2026: காசாவில் கொல்லப்பட்ட சிறுமியின் கதையைக் கூறும் ‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’ திரைப்படம் பரிந்துரை

Date:

உலகின் மிகமுக்கியமான திரைப்பட விருதான ஒஸ்கார் விருதுகளின் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) பிரிவில், கவுத்தர் பென் ஹனியா இயக்கிய  ‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’  (The Voice of Hind Rajab) திரைப்படத்தை துனீசியா, அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுத்துள்ளது.

மேலும், ACCPartner, MADDistribution இந்த திரைப்படத்தின் அரபு நாடுகளுக்கான விநியோக உரிமைகளை பெற்றுள்ளது.

அரபு கதைகளை உலகம் முழுக்க பரப்புவதில் அவர்கள் வகிக்கும் முக்கியப் பங்கிற்கு இது ஒரு புதிய கட்டமாகும்.

காசாவில் இஸ்ரேலிய இராணுவப் படைகளால் கொல்லப்பட்ட ஐந்து வயது சிறுமியின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் நட்சத்திரங்கள் பிராட் பிட், ஜோவாகின் பீனிக்ஸ் மற்றும் ரூனி மாரா ஆகியோர் அதன் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும், இயக்குனர்கள் ஜோனதன் கிளேசர் மற்றும் அல்போன்சோ குரோன் ஆகியோருடன் இணைந்து நடித்தனர்.

பென் ஹானியா எழுதி இயக்கிய இந்தப் படம், அதன் மையக் கதை உண்மையான ஆடியோ பதிவுகளை உள்ளடக்கியது. ஒரே இடத்தில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம், அமைதி, பயம் மற்றும் அநாதரவாக விடப்பட்ட ஒரு குழந்தையின் வளர்ந்து வரும் பதற்றம் ஆகியவற்றை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

Popular

More like this
Related

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

சர்ச்சைக்குரிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான பணமோசடி...

மௌலவி என்பதற்காக மட்டும் ஒருவரை பின்தொடர்வது ஆபத்தானது; ஈஸ்டர் ஞாயிறு தீர்ப்பு தரும் பாடங்களில் ஒன்று.

2019 Easter Attack தொடர்பான வழக்கில் நேற்று குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் முக்கியமான...

முன்னாள் பிரதமர் நஜ்புத்தீன் எர்பகான் நினைவாக சிறப்பு வெள்ளி நாணயம்: துருக்கி நிதி அமைச்சகம் வெளியீடு!

துருக்கியின் முன்னாள் பிரதமரும், நாட்டின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவருமான...

3 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி!

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதன்படி,...