கல்விச் சீர்திருத்த செயற்பாடுகளில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு: தேசிய சூரா சபை பிரதமருக்கு அவசர கடிதம்

Date:

இலங்கையில் கல்விக் கொள்கையினை வகுக்கும் அமைப்புகளில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் போதுமாக இல்லாதது குறித்து தேசிய ஷூரா சபை (NSC), பிரதமரும் கல்வி அமைச்சருமான பேராசிரியர் ஹரிணி அமரசூரிய (பா.உ)க்கு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க 2026 கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் கல்வி கொள்கை வகுப்பவர்களின் அமைப்புகளில் முஸ்லிம் சமூகத்தின் நியாயமான பிரதிநிதித்துவம் இல்லாததை நிவர்த்தி செய்யுமாறு ஆகஸ்ட் 29, 2025 ஆம் திகதிய கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் முன்னணி சிவில் தலைமையான தேசிய சூரா சபை, கல்வி முறையில் வரவிருக்கும் மாற்றங்களுக்கு மத்தியில் முக்கிய கல்வி சார் அமைப்புக்களுக்கான தற்போதைய நியமனங்களில் “சிக்கலான இடைவெளி” நிலவுவதாக சுட்டிக் காட்டியுள்ளது. அதற்கான எடுத்துக்காட்டுகளையும் தேசிய சூரா சபை முன்வைத்துள்ளது.

தேசிய கல்வி ஆணைக்குழு (NEC): 15 உறுப்பினர்கள் உள்ளனர், ஆனால் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை.

தேசிய கல்வி நிறுவனத்தின் கல்வி விவகார சபை : 15 உறுப்பினர்கள் உள்ளனர், ஆனால் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை.

தேசிய கல்வி நிறுவனத்தின் கவுன்சில்: 11 உறுப்பினர்கள் உள்ளனர், ஒரே ஒரு முஸ்லிம் தொழில்வாண்மையாளர். முஸ்லிம் கல்வியாளர்கள் இல்லை.

உத்தேச கல்வி கவுன்சில் வரைவுக்கான குழு: 9 உறுப்பினர்கள் உள்ளனர், முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை.

தன்னார்வ ஆலோசனை கவுன்சில் (கல்வி அமைச்சகம்): 14 உறுப்பினர்கள் உள்ளனர், முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை.

இலங்கையின் சனத் தொகையில் அண்ணளவாக 10% ஆக இருக்கும் முஸ்லிம் சமூகத்தை ஒதுக்குவது, எதிர்கால கல்வி சீர்திருத்த வரைவுகளில் அவர்களது குரலை இல்லாமல் செய்கிறது எனவும், இந்த புறக்கணிப்பு கொள்கை பின்னடைவுகளுக்கும் சமூகத்தின் நம்பிக்கையை இழப்பதற்கும் வழிவகுக்கும் எனவும் இது தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் குறித்த மேல்முறையீட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இவற்றை நிவர்த்திக்கும் வகையில் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய சூரா சபை பிரதமரை வலியுறுத்தியுள்ளது:

NEC, NIE கவுன்சில், கல்வி விவகார சபை மற்றும் கல்விச் சீர்திருத்தங்களுடன் தொடர்புடைய ஏனைய குழுக்களுக்கு தகுதியான முஸ்லிம் கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். .

2026 சீர்திருத்த செயல்முறையின் போது கல்வி நிர்வாகத்தில் அனைத்து முக்கிய சமூகங்களினதும் நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான ஒரு உள்ளடக்கிய கட்டமைப்பை இணைத்துக் கொள்ள வேண்டும்.

சீர்திருத்தங்கள் அனைத்து சமூகங்களின் குரல்களையும் பிரதிபலிப்பதை உறுதி செய்வதன் மூலம் சமத்துவமும் ஒற்றுமையும் நிலவும் இலங்கையின் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும்.

இந்த மேல்முறையீட்டில் தேசிய சூரா சபையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர், பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

Urgent Appeal for Fair Representation for the Muslim Community in Educational Policy-Making Bodies

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இஸ்ரேல் – இலங்கை ஒப்பந்த வேலைவாய்ப்பு நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் விசேட கவனம்!

இஸ்ரேலுக்கு இலங்கை தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் ஈடுபட்டுள்ள மோசடி இடைத்தரகர்களுக்கு எதிராக...

செப் 07 இல் இலங்கை வானில் தெரியும் குருதி நிலவு..!

இந்த ஞாயிற்றுக்கிழமை போயா தினத்தன்று (செப்டம்பர் 7) இரவு வானத்தில் பூரண...

கரன்னாகொடவின் ஆங்கிலப் புத்தகத்திற்கு பிரித்தானியாவில் தடை

இலங்கையின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் கடற்படை அதிகாரியின் சுயசரிதையின் ஆங்கிலப்...