பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் அஞ்சலிக்காக தங்காலை மாநகர சபையில்..!

Date:

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களின் உடல்கள் தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை 10 பேரின் உடல்கள் நகர சபைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தங்காலை பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணமாக சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற பஸ், நேற்று முன்தினம் (04) எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் 24வது கிலோமீற்றர் தூண் அருகே உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் தங்காலை நகர சபை செயலாளர் டி.டபிள்யூ. கே. ரூபசேன உட்பட நகர சபையின் 12 ஊழியர்கள், 2 குழந்தைகள் மற்றும் பஸ் சாரதி ஆகியோர் உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த 18 பேர் பதுளை போதனா வைத்தியசாலை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மீலாத் தினத்தை முன்னிட்டு தமிழ் நாட்டில் சமூக நல்லிணக்க பேரணி!

தமிழ்நாடு தோப்புத்துறையில் மீலாது நபியை முன்னிட்டு தோப்புத்துறையில் ஹஜ்ரத் ஷெய்கு அப்துல்...

12 மணித்தியாலங்களில் 04 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!

நாட்டில் கடந்த 12 மணித்தியாலங்களில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற 4 துப்பாக்கிச்...

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி விழா!

தேசிய மீலாதுன் நபி விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்...

இன்று நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து விலைகள் ரூ. 25 ஆல் குறைப்பு

இன்று (06) நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி முட்டைரொட்டி...