23 நிமிடங்கள் கைதட்டலால் அதிர்ந்த அரங்கம்: விருது வென்ற ஆவணப்படம் ‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’

Date:

இஸ்ரேலால் சுட்டுக் கொல்லப்பட்ட 5 வயது பலஸ்தீன சிறுமியான ஹிந்த் ரஜப்பின் கதையைச் சொல்லும் ‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’ 82வது வெனிஸ் திரைப்பட விழாவில் சில்வர் லயன் விருதை வென்றது.

பிரெஞ்சு-துனிசிய இயக்குனர் கௌதர் பென் ஹனியாவால் இயக்கப்பட்ட இந்த ஆவணப்படம் ஹிந்த் ரஜப் உடைய வாழ்வின் இறுதித் தருணங்களை ஆவணப்படுத்தி உள்ளது.

கடந்த ஜனவரி 29, 2024 அன்று காசாவில் இருந்து தப்பிச் செல்லும்போது, ஹிந்தும் அவளது குடும்பத்தினரும் பயணித்த கார் இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டில் காரில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். காரில் ஹிந்த் மட்டுமே உயிருடன் இருந்தாள். கடைசி தருணத்தில், மீட்பு அமைப்பான ரெட் கிரசண்ட் சொசைட்டிக்கு ஹிந்த் போன் செய்து உதவி கேட்டாள்.

ஆனால் இறுதியில் ஹிந்த் மற்றும் அவளை மீட்க வந்த 2 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரும் மீண்டும் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.

‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’ ஆவணப்படத்தில் ஹிந்த் மீட்பு அமைப்பினரிடம் போனில் தனது மழலைக் குரலில் உதவி கோரிய ஆடியோ இடம்பெற்றுள்ளது.

விருது வென்றது குறித்து பேசிய படத்தின் இயக்குனர் பென் ஹனியா, “இந்தப் படத்தால் ஹிந்தை மீண்டும் கொண்டு வரவோ அல்லது அவள் அனுபவித்த அநீதியை அழிக்கவோ முடியாது. ஆனால் அவளது கதை படத்தின் எல்லைகளைக் கடந்து சென்றுள்ளது. இது ஹிந்தை பற்றியது மட்டுமல்ல, ஒரு முழு தேசத்தின் கதையைப் பற்றியது” என்று தெரிவித்தார்.

வெனிஸ் விழாவில் படத்தை பார்த்தவர்கள் சுமார் 23 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டி, பாலஸ்தீனத்தை மீட்போம் என கோஷங்களை எழுப்பினர். வெனிஸ் விழாவில் அதிக நேரம் ஸ்டாண்டிங் ஓவேஷன் பெற்ற படமும் இதுவே ஆகும்.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...