நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

Date:

இன்றையதினம் (29) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஊவா மாகாணத்திலும், அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் மற்றும் சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மாவனல்லையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு!

மாவனல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த...

மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடம் அதிகம் போதைப்பொருள் பயன்பாடு!

நாட்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல்...

கின்னஸ் சாதனை படைத்த இலங்கை தேயிலை!

உலகின் மிகவும் விலையுயர்ந்த தேயிலை வகையை தயாரித்தது, இலங்கையின் விதானகந்த தேயிலை...

சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் விசேட நிகழ்வுகள்!

எதிர்வரும் சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் புதிதாக பிறந்த...