உலகின் மிகவும் விலையுயர்ந்த தேயிலை வகையை தயாரித்தது, இலங்கையின் விதானகந்த தேயிலை தொழிற்சாலை புதிய கின்னஸ் சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளது.
Ceylon Black Tea என அறியப்படும் குறித்த தேயிலை ஒரு கிலோ 252,500 ரூபாவிற்கு விற்பனையாகியுள்ளது.
இதனூடாக உயர் தரம்மிக்க இலங்கை தேயிலைக்கான உலகளாவிய கேள்வி சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் செல்வாக்குமிக்க தேயிலை தொழிற்துறையில் இலங்கையின் தரத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.