ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை மீள ஒப்படைக்க முடியும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

Date:

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதற்கமைய குறித்த முன்னாள் ஜனாதிபதிகள் தாம் அனுபவித்த வரப்பிரசாதங்களை மீள அரசாங்கத்திடம் கையளித்து வருகின்றனர்.

எனினும், அந்த ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை.

இந்தநிலையில், சிலர் தாங்கள் பயன்படுத்திய சில பாதுகாப்பு வாகனங்களை கூட மீள ஒப்படைத்துள்ளனர்.

இந்த சட்டத்தின் கீழ் சில வரப்பிரசாதங்கள் மீள கையளிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எனவே, பாதுகாப்பு வாகனம் உள்ளிட்ட பாதுகாப்பு வரப்பிரசாதங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளால் கோரிக்கை முன்வைக்கப்படுமாயின், அது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்ய தயாராகவுள்ளது.

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் கீழ் வராத பாதுகாப்பு சார் விடயங்களை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

Popular

More like this
Related

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...

நீர்கொழும்பு, கட்டான பகுதிகளில் நீர்வெட்டு

நீர்கொழும்பு மற்றும் கட்டான ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (12) முற்பகல்...

‘தூதர்களை வெளியேற்றினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்’: ஐரோப்பா, அரபு நாடுகளுக்கு ஈரான் நிபந்தனை.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய புரட்சிகர...

Rebuilding Sri Lanka: இலங்கையை மீளக் கட்டியெழுப்ப WAMY அமைப்பிடமிருந்து நிதி உதவி!

கடந்த 2025 டிசம்பரில் இலங்கையின் பல பகுதிகளைச் சூறையாடிய 'டிட்வா'  சூறாவளியினால்...