165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

Date:

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (08) நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக சபையில் எழுப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், 2025 செப்டம்பர் 30 நிலவரப்படி, மொத்தம் 165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் வழங்கப்படவில்லை என்றார்.

இது தொடர்பாக மேலும் தெளிவுபடுத்திய அமைச்சர், நாங்கள் ஆரம்பத்தில் திட்டமிட்டதை விட வாகன இலக்கத் தகடுகளை வழங்குவது மிகவும் தாமதமானது.

புதிய இலக்கத் தகடுகளில் ஏழு சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

இலங்கையில் இந்த அம்சங்களை சோதிக்கும் பணியை மொரட்டுவா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்தோம்.

இந்த செயல்முறைக்கு அவர்கள் சுமார் மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டனர். எனினும், ஏழு அம்சங்களில் ஆறு அம்சங்களை மட்டுமே அவர்களால் சரிபார்க்க முடிந்தது.

எனவே, ஏழாவது அம்சத்திற்காக நாங்கள் சர்வதேச சோதனையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதுதான் இந்த தாமதத்திற்கு முக்கிய காரணம். பாதுகாப்பு அளவை மேம்படுத்த நாங்கள் எடுத்த முயற்சிகளும் இதன் விளைவாக தாமதத்திற்கு பங்களித்தன.

இதனிடையே, புதிய சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் உள்ள சிக்கல்கள் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்குள் தீர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...