ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையிலேயே உள்ளது: சுகாதார அமைச்சு

Date:

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி ‘என்டோரோமிக்ஸ்’ (Enteromix) தொடர்பான பரபரப்பான கூற்றுகளுக்கு எதிராக இலங்கை சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குறித்த தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையிலேயே (pre-clinical stage) இருப்பதாகவும், அறிவியல் ரீதியான சரிபார்ப்பு மூலம் அதன் செயற்திறன் இன்னும் நிரூபிக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
என்டோரோமிக்ஸ் (Enteromix) தடுப்பூசி “100 சதவீதம் புற்றுநோயை குணப்படுத்தும்” என கூறி வைரலாக பரவும் பதிவுகள் மற்றும் சர்வதேச அறிக்கைகளின் எழுச்சிக்கு மத்தியில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
“புற்றுநோய் சிகிச்சையில் எந்தவொரு முன்னேற்றமும் வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த தடுப்பூசி இன்னும் ஆரம்பக் கட்ட வளர்ச்சியில் தான் உள்ளது,” என சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
“இதன் செயற்திறன் குறித்து எந்த முடிவுகளையும் எடுப்பதற்கு முன், இது சரியான புற்றுநோயியல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட வேண்டும்.” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...