இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. திரைப்படக் கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டு 5 தசாப்தங்கள் கடந்துள்ளன.
குறித்த காலப்பகுதியில் சினிமாத் துறையுடன் தொடர்புடைய தொழில்நுட்ப மாற்றங்கள், சமூக, அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
நடைமுறைக்கு ஏற்ற வகையில் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் நிறுவன கட்டமைப்பு மற்றும் கடமைகளை மறுசீரமைக்கும் தேவை கண்டறியப்பட்டுள்ளது. திரைப்பட ஒழுங்குபடுத்தல் மற்றும் திரைப்பட கலாசார மேம்பாடு உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் நிறுவனத்தின் கடமைகள் தொடர்பில் அடிப்படை சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சட்டத்தை நீக்கி, இலங்கை தேசிய சினிமா சபையை ஸ்தாபிக்கும் வகையில் துறைசார் அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
