பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை- அமெரிக்காவுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

Date:

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் நேற்று (14) இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், மொன்டானா தேசிய பாதுகாப்புப் படையின் நிறைவேற்றுத் தளபதி பிரிகேடியர் ட்ரெண்டன் கிப்சன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா கையெழுத்திட்டார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் அரச கூட்டுறவின் கீழ், மொன்டானா தேசிய பாதுகாப்புப் படை அமெரிக்க கரையோரக் காவற்படையின் 13 ஆவது பிரிவு மற்றும் இலங்கை ஆயுதப்படைகள் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...