திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பௌத்த சிலை தொடர்பான சர்ச்சை குறித்து உண்மை நிலையை ஆராயும் நோக்கில், தர்ம சக்த்தி அமைப்பின் தலைவர் மற்றும் அமரபுர பீடத்தின் மகாநாயக்க தலைவர் மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரர் தலைமையிலான குழுவொன்று இன்று சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு விஜயம் செய்தது.
அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து நிலைமைகளை நேரடியாக உரையாடினர்.
திருகோணமலை பகுதியில் கடந்த சில நாட்களாக இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தர்ம சக்தி அமைப்பின் இந்த விஜயம் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

