சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல தேசியப் பூங்காக்களை மீண்டும் திறப்பதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் நீரின் அளவு குறைந்து வீதிகள் மீள் புனரமைக்கப்பட்டுள்ளமையால், குமன தேசியப் பூங்கா, ஹோர்டன் சமவெளி தேசிய பூங்கா, மற்றும் யால தேசியப் பூங்காவின் V பிரிவு ஆகியன இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படுகின்றன என வனஜீவராசிகள் (பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மேலாண்மை) பணிப்பாளர் மஞ்சுள அமரரத்ன தெரிவித்துள்ளார்.
மரங்கள் முறிந்து விழும் ஆபத்துக்கள் இருப்பதால் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை, பின்னவெல மிருகக்காட்சி சாலை ஆகியவற்றின் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.
பின்னவெல யானைகள் சரணாலயம், ரிதியகம சஃபாரி பூங்கா ஆகியன திங்கட்கிழமை முதல் மீண்டும் பொதுமக்களின் பார்வையிடலுக்காக திறக்கப்பட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சிச் சாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து பூங்காக்களும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
