சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட சீனத் தூதுக்குழுவொன்று இன்று (23) காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.
இன்று முற்பகல் 9.45 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான UL-319 விமானம் மூலம் 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக அந்தக் குழு நாட்டை வந்தடைந்தது.
அவர்களை வரவேற்பதற்காக இலங்கையிலுள்ள சீனத் தூதுவர் மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்துள்ளனர்.
இலங்கையின் பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பேரிடர் நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்கவும், இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட இராஜதந்திரிகளைச் சந்தித்து கலந்தரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
