திட்வா புயல் தாக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் எதிர்வரும் 12ம் திகதி மீள ஆரம்பமாகவுள்ளன.
குறித்த பரீட்சைகள் ஜனவரி மாதம் 20ம் திகதி வரை இடம்பெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 2086 மத்திய நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறும்.
