அனர்த்தங்களினால் முழுமையாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு காணிகளை நன்கொடையாக வழங்க சந்தர்ப்பம்

Date:

திட்வா புயல் தாக்கத்துடன் ஏற்ப்பட்ட அனர்த்த நிலைமைகள் காரணமாக பெருமளவானோர் வீடு மற்றும் காணிகளை இழந்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் அரசினால் Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமைய அனர்த்தங்களினால் முழுமையாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான காணியை நன்கொடையாக வழங்குவதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

www.rebuildingsrilanka.gov.lk என்ற இணையத்தளத்தில் அல்லது 1800 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் ஊடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

காணிகளை நன்கொடையாக வழங்குபவர்களின் விபரங்களை 0112 331 246 என்ற பெக்ஸ் இலக்கத்திற்கு அனுப்ப முடியும். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரையும் கைவிடாது அவர்கள் வாழ்வியல் இருந்ததைவிடவும் சிறப்பான மட்டத்தில் அமைய வேண்டுமென்பதே அரசின் எதிர்பார்ப்பாகும்.

குறித்த சகோதரத்துவ மக்களுக்காக Rebuilding Sri Lanka வேலைத்திட்டத்துடன் கைகோர்க்குமாறு நாடு முழுவதிலுள்ள பரந்த மனப்பான்மைக் கொண்ட மக்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Popular

More like this
Related

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...