பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பு சந்திப்பு

Date:

இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் (National Interfaith Clergy Fellowship of Sri Lanka) சர்வமதத் தலைவர்கள் குழுவினர், இன்று (02) இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) பஹீம்-உல்-அசீஸ் (Faheem-ul-Aziz) அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

நாட்டின் முக்கிய மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலாநிதி சாஸ்திரபதி காலகம தம்மரான்சி நாயக்க தேரோ (பௌத்த விவகாரங்கள்) அல்-ஹாஜ் அஷ்-செய்யத் கலாநிதி ஹசன் மௌலானா அல்-காதிரி (முஸ்லிம் விவகாரங்கள்) அருட்தந்தை கலாநிதி நிஷான் சம்பத் குரே (கிறிஸ்தவ விவகாரங்கள்) சிவஸ்ரீ பாபு சர்மா குருக்கள் (இந்து விவகாரங்கள்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், பிராந்திய அமைதி, மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் இலங்கை – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான நீண்டகால இராஜதந்திர நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் மதத் தலைவர்களின் பங்களிப்பை உயர்ஸ்தானிகர் இதன்போது பாராட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் சமூக உறவுகளை மேம்படுத்த தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உறுதி அளித்தார்.

Popular

More like this
Related

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...

இன நல்லிணக்கத்தை நோக்கிய பயணம்: நிதா அறக்கட்டளையின் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நாட்டில் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும், மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில், நிதா...

பெலாரஸில் அதிரடி: தன்பாலின ஈர்ப்பை ஆதரிப்பது இனி கிரிமினல் குற்றம்!

பெலாரஸ் நாட்டில் தன்பாலின ஈர்ப்பு மற்றும் LGBTQ+ சமூகத்தினருக்கு ஆதரவாகப் பேசுவது...

இலங்கைக்கான எண்ணெய், சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும், இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார...