ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஈரான் மீதான சர்வதேச அழுத்தங்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டு, அந்த நாட்டுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் ‘ஈரானுடன் ஒற்றுமைக்கான இயக்கம்’ (Movement for Solidarity with Iran) இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது.
அதன்படி, இன்று 11ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பு 07, ஜாவத்தை வீதியில் அமைந்துள்ள ஈரான் தூதரகத்திற்கு முன்பாக பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்வில் ஈரானுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய சுலோகங்களைத் தாங்கியவாறு பலரும் கலந்துகொண்டனர்.

