நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (16) இலங்கை வந்தடைந்தார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக வருகை தந்த அவர், எதிர்வரும் புதன்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பார்.

இந்த விஜயத்தின் போது, கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, அரசாங்க அதிகாரிகள் மற்றும் முக்கிய தரப்பினரை சந்திக்கவுள்ளதுடன், ‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேரடியாக அவதானிக்கவுள்ளார்.

அத்துடன், நாட்டை வழமைக்குக் கொண்டு வரும் பணிகளுக்கு ஆதரவளிக்கக்கூடிய வழிகள் மற்றும் நாட்டின் பிரஜைகளுக்கு மிகவும் வலுவான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...