பங்களாதேஷ் புதிய பிரதமராகப் பதவியேற்றார் தாரிக் ரஹ்மான்!

Date:

பங்களாதேஷ் நாட்டின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றுக் கொண்டார்.

பங்களாதேஷில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில், மொத்தமுள்ள 297 இடங்களில் 209-ல் இடங்களில் மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சி (பிஎன்பி) வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, வங்கதேச தேசியவாத கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக தாரிக் ரஹ்மான் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் செவ்வாய்க்கிழமை காலை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, தாரிக் ரஹ்மான் தலைமையிலான 25 அமைச்சர்கள் மற்றும் 24 இணையமைச்சர்கள் கொண்ட அமைச்சரவைக் குழு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றக் கட்டடமான ஜதிய சங்கசத் பவனில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் தாரிக் ரஹ்மான் பங்களாதேஷின் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். அந்நாட்டின் அதிபர் முகமது சகாபுதீன் தாரிக் ரஹ்மானுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும், தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா சார்பில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், அவாமி லீக் கட்சியின் ஷேக் ஹசீனா மற்றும் பிஎன்பி கட்சியின் கலீதா ஜியா ஆகியோர் மட்டுமே பிரதமராகப் பதவி வகித்து வந்த நிலையில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக வங்கதேசத்துக்கு ஆண் ஒருவர் பிரதமராகப் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சு.

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தைத் தணித்து, மத்திய கிழக்கு...

நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை...

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...