-
கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் மட்டுமே பெறப்பட்டன.…
-
ஜெட்டாவுக்கான கொன்சல் ஜெனரலாக முஸ்லிம் அல்லாத ஒருவரின் நியமனம் தற்காலிகமானதே: பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் விளக்கம்!
வரலாற்றில் முதல் முறையாக, முஸ்லிம் அல்லாத ஒருவரை சவூதி அரேபியாவின் ஜெட்டா கொன்சல் ஜெனரலாக இலங்கை வெளிவிவகார அமைச்சு நியமித்துள்ளமை தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு கருத்துகளும் விவாதங்களும் எழுந்துள்ளன. முன்னதாக, ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகளுடன் தொடர்புடைய நிர்வாக நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ளும்…
-
பாடப்புத்தகத்தில் பொருத்தமற்ற வாசகம் தொடர்பான விசாரணையை ஆரம்பித்த கல்வி அமைச்சு!
தரம் 6 இல் ஆங்கிலப் பாடத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பொருத்தமற்ற வாசகம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சு நேற்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தேசிய கல்வி நிறுவனத்தினால் (NIE) தயாரிக்கப்பட்டு, தற்போது அச்சிடப்பட்டுள்ள 06…
-
மத சுதந்திரத்தை மதித்த இந்து பெற்றோர்: மகனை உம்ராவுக்கு வழியனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம்
தமிழ்நாட்டில் இருந்து சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்த, மனதை நெகிழவைக்கும் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்ட தங்களது மகனை, உம்ரா யாத்திரைக்காக அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பிய இந்து குடும்பத்தின் செயல் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. தங்களது மகன் எடுத்த தனிப்பட்ட…
-
நாட்டில் சில பகுதிகளில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என…
-
ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழத்திற்கு வரிச்சலுகை
ரமழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகையை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. அடுத்துவரும் றமழான் நோன்புக் காலம் 2026.02.19 அன்று ஆரம்பித்து…
-
இஸ்ரேலில் இலங்கையர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள்!
இஸ்ரேல் நாட்டில் உள்ள வர்த்தக மற்றும் சேவைத் துறைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்த அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வீட்டுப் பணி, விவசாயம் மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் நிலவும் ஒப்பந்தங்களுக்கு மேலதிகமாக, தற்போது ‘G’ பணிச்சட்டகத்தின் கீழ் புதிய ஆட்சேர்ப்பு…
-
டிசம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை நாளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்
டிசம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகையை தபால் நிலையங்கள் மூலம் இதுவரை பெறாத முதியோர், நாளை புதன்கிழமை (31) நண்பகல் 12.00 மணிக்கு முன்பதாக குறித்த உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. மேலும், இன்றுவரை உதவித்தொகையைப் பெறாதவர்கள், 2026-01-05 அன்று மீண்டும் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என…
-
போக்குவரத்து அபராதங்களைச் செலுத்த GovPay முறைமை 7 மாகாணங்களில் அமுல்
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான அபராதங்களைச் செலுத்தக்கூடிய GovPay முறைமையானது தற்போது இலங்கையின் 7 மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறைமை இதுவரை சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மாத்திரமே நடைமுறைக்கு வரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 33 வகையான போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் GovPay…
-
அல்-கஸ்ஸாம் படைப் பிரிவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அபு உபைதா கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஹமாஸ்.
காசாவை மையமாகக் கொண்டு இஸ்ரேல் மேற்கொண்ட கடந்த இரண்டு ஆண்டுகாலப் போரின் போது, ஹமாஸ் அமைப்பின் முக்கிய செய்தித் தொடர்பாளர் அபூ உபைதா (உண்மை பெயர்: ஹுதைஃபா அப்துல்லா அல்-கஹ்லூத்) உயிரிழந்துள்ளதாக, ஹமாஸ் இன்று (30) உறுதிப்படுத்தியுள்ளது. ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்…









