-
பகிடிவதை: கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 15 பேர் கைது!
கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் மாணவிகள் குழுவை பகிடிவதை செய்த 6 மாணவிகள் மற்றும் 9 மாணவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் 24 முதல் 26 வயதுக்குட்பட்ட மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 2021…
-
ஜனாதிபதி அநுர தலைமையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய மீலாத் தின நிகழ்வு
தேசிய மீலாதுன் நபி தின நிகழ்வு நாளை செப்டம்பர் 5 அன்று ஹம்பாந்தோட்டை மாவட்டம், அம்பலாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள போலான கிராமத்தின் மஸ்ஜிதுல் அரூஸிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் பி.ப. 02.30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற…
-
கொழும்பின் சில பகுதிகளுக்கு 09 மணிநேரம் நீர்வெட்டு
கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 09 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. திருத்தப்பணிகள் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை (06) காலை 10.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி,…
-
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ‘வியத்புர’ சலுகைகள் இரத்து!
பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்குதலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2022.05.09 அன்று நாட்டில் இடம்பெற்ற குழப்பகரமான சூழ்நிலையால் வீடுகளை இழந்த அப்போதிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையால் நிர்மாணிக்கப்பட்ட வியத்புர வீட்டுத்தொகுதியில் 101…
-
வெற்றிகரகமாக நிறைவடைந்த Profood 2025 கண்காட்சி
Sri Lanka Food Processors Association (இலங்கை உணவு பதப்படுத்துநர்கள் சங்கம் - SLFPA) மற்றும் Lanka Exhibition and Conference Services (இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் - LECS) இணைந்து நடத்திய 22ஆவது Profood Propack & Agbiz கண்காட்சி,…
-
அரசுக்கு சொந்தமான 33 நிறுவனங்களை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி!
தற்போது தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை முறையாக மூடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அரசாங்கத்தின் மறுசீரமைப்பு முயற்சியின் இரண்டு கட்டங்களின் கீழ் மூடப்பட உள்ளன. பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கல் மற்றும் மூலோபாய ரீதியான பொருளாதார…
-
காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் விசேட குழுக்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி!
காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய நபர்களை உள்ளடக்கிய குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டத்தின்…
-
தரம் 2 -11 வரையான மாணவர்கள் ஆட்சேர்ப்பு சுற்றறிக்கையில் மாற்றம்: அமைச்சரவை அங்கீகாரம்
பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த 2 ஆம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரை மாணவர்களை உள்வாங்குவதற்கு ஏற்புடைய வகையில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைச் சுற்றறிக்கைகளை இரத்துச்செய்து, அதற்குப் பதிலாக புதிய ஆலோசனைச் சுற்றறிக்கையை வெளியிடுவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு…
-
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: 51,969 பேர் சித்தி!
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளில் மொத்தம் 51,969 பேர் (17.11%) சித்தியடைந்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிங்கள மொழி மூலப் பாடத்திற்கு 140 வெட்டுப்புள்ளிகளும் தமிழ் மொழி மூலப் பாடத்திற்கு 134 வெட்டுப்புள்ளிகளும் என பரீட்சைத் திணைக்களம்…
-
நாட்டின் சில பகுதிகளில் அவ்வவ்போது மழை
இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு, மொணராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது…








