-
ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனு ஒத்திவைப்பு!
மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனு கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு ஆட்சேபனை மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று கொழும்பு…
-
கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் கோர விபத்து: ஒருவர் பலி, 35 பேர் படுகாயம்
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே, இரட்டைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிவேகமாக வந்த லொறி ஒன்று எதிர்திசையில் வந்த பேருந்துடன் மோதியதில் இந்த…
-
இன்று முதல் புதிய பரிணாமத்துடன் யுக்திய சுற்றிவளைப்பு!
யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் புதிய பரிணாமத்துடன் இன்று(04) முதல் மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றது. நவீன யுக்திகளுடன் இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். போதைப்பொருளுக்கு அடிமையானர்களுக்கான புனர்வாழ்விற்காக பல்வேறு செயற்றிட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்கீழ்,…
-
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி ஆதரவு!
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி, ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என ரணில் விக்கிரமசிங்க உறுதியாக நம்புவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின்…
-
இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு இன்று யாழில் அஞ்சலி
காலஞ்சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று(04) யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இரா.சம்பந்தனின்…
-
ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு மற்றும் புத்தளம் மாவட்ட ஜம்இய்யாவுக்குமிடையே விசேட ஒன்றுகூடல்: யாப்பினை அடிப்படையாகக் கொண்ட விதத்தில் பணிகளை முன்னெடுப்பது குறித்தும் கவனிப்பு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழுவினர் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா-புத்தளம் மாவட்டக் கிளை நிர்வாகிகளுக்கிடையிலான விஷேட ஒன்றுகூடலொன்று நேற்று முன்தினம் (02) ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் ஜம்இய்யாவின் இலக்கு, பணிக்கூற்று மற்றும் யாப்பினை அடிப்படையாகக்கொண்டு புத்தளம் மாவட்டத்தில் அனைத்து…
-
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் நாளையுடன் நிறைவு!
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்துள்ள மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலம், நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இணைய வழியாக மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என்றும், உரிய காலப்பகுதிக்குள் விண்ணப்பதாரர்கள்…
-
பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்
இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணம், கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு…
-
திருகோணமலை ஸாஹிரா பாடசாலை மாணவிகளின் இடைநிறுத்தப்பட்ட பெறுபேறுகள் வெளியீடு
திருகோணமலை ஸாஹிரா பாடசாலை மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலையீட்டில் அவர்களுடைய பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சை எழுதும் போது, அவர்களின் ஆடை காதுகளை மறைத்திருந்ததாக கூறப்படும் காரணத்தினால் 70இற்கும் மேற்பட்ட திருகோணமலை ஸாஹிரா பாடசாலை மாணவிகளின்…
-
பாரிய நட்டத்தை சந்தித்துவரும் மத்தளை விமான நிலையத்தின் நிர்வாகம் ரஷ்ய-இந்திய கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்: நிமல் சிறிபால டி சில்வா
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை எனவும், மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே செய்யப்பட்டு வருவதாகவும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். சட்ட ரீதியில் கூட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 49% மட்டுமே வேறொரு நிறுவனத்துக்கு வழங்க முடியும்…