மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளுடன் சிறப்பாக இடம் பெற்ற  சிவராத்திரி நிகழ்வு.

Date:

வரலாற்று  சிறப்பு மிக்க    மன்னார்  திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு நேற்று  வியாழக்கிழமை(11) இடம் பெற்றது. இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
-நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து செல்லும் நிலையில் சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக மஹா சிவராத்திரி நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது.
-பொலிஸார்,இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புகளுக்கு மத்தியில் கடுமையான சுகாதார நடை முறைகளுடன் சிவராத்திரி நிகழ்வுகள் இடம் பெற்று வருவதோடு,  ஆறு ஜாம பூஜைகளும் இடம் பெற்று  வருகின்றது.
அதே நேரத்தில் இராணுவம் பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையினரின் கண்கானிப்பின் கீழ் மஹா சிவராத்திரி பூஜைகள் இடம் பெற்று வருகின்றது.
பாலாவி தீர்த்த கரையில் நீராடுவதும் தீர்த்தம் எடுத்து செல்வதும் பாதுகாப்பு காரணங்களால் தடை செய்யப்பட்டுள்ளது.
சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீஸ்வர திருப்பணி சபையின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட இந்து கலாச்சார நிகழ்வுகள் அறநெறி சொற்பொழிவு நிகழ்வுகளும் இடம் பெற்று வருகின்றது.
-சுகாதார துறையினர் கொரோனா தொடர்பில் சுகாதார நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)

Popular

More like this
Related

பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல்...

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு – கண்டி வீதி மூடப்பட்டுள்ளது!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு – கண்டி வீதியில்...

டிட்வா சூறாவளியால் 43,991 பேர் பாதிப்பு

டிட்வா  சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த...

பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்  இஸ்மாயில் முத்து முஹம்மது...