கொவிட்-19 இன் அச்சுறுத்தல் நிலை உலக நாடுகள் பலவற்றை இன்னமும் ஆட்டிப்படைத்து வரும் நிலையில் உடம்பில் கொவிட்-19 தடுப்புச் சக்தியை தாங்கிய உலகின் முதலாவது குழந்தை அமெரிக்காவில் பிறந்துள்ளது.
கொவிட் தடுப்பூசியின் முதலாவது சொட்டை பெற்றுக் கொண்ட கர்பிணிப் பெண்ணான அமெரிக்காவின் தென் புளோரிடா பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். கர்ப்பிணிக் காலத்தில் இந்தப் பெண்ணுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டதால் பெரும்பாலும் இந்தக் குழந்தை கொவிட்-19 தடுப்புச் சக்தியோடு பிறந்திருக்கலாம் என தாங்கள் நம்புபவதாக இந்தக் குழந்தையை ஆராய்ந்த இரண்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் இது சம்பந்தமான மேலதிக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சுகாதாரத்துறை ஊழியரான மேற்படி பெண்ணுக்கு கடந்த ஜனவரி மாதத்தில் கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அப்போது அவர் 36 வார கால கர்ப்பிணி பெண்ணாக இருந்தார் என்றும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.