ஜனாதிபதி ஊடகங்களையோ ஊடகவியலாளர்களையோ அச்சுறுத்தவில்லை – கெஹெலிய

Date:

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை. ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களின் செயற்பாடுகள் தொடர்பிலேயே தனது நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தார் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களின் செயற்பாடுகள் தொடர்பிலேயே அண்மையில் ஜனாதிபதி கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இதனை ஊடகவியலாளர்களுக்கோ அல்லது அதனுடன் தொடர்புடையவர்களுக்கோ அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக கருத முடியாது.

ஜனாதிபதியால் கூறப்பட்ட கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்படுகின்றன. எனவே இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் வீணாகக் குழப்பமடையத் தேவையில்லை.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கழுவேவா தனிப்பட்ட காரணத்திற்காகவே பதவி விலகியுள்ளார்.

தொழிற்துறையில் அடுத்த கட்ட நகர்வுகளை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புக்கள் அவருக்கு கிடைக்கப் பெறும் போது அதற்கு நாம் இடமளித்துள்ளோம் என்றார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...