அக்கரபத்தனை – போபத்தலாவ வனப் பகுதியில் கம்பியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

Date:

அக்கரபத்தனை – போபத்தலாவ வனப் பகுதியில் கம்பிகளில் சிக்குண்டு, காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மலையகத்திற்கு உரித்தான சிறுத்தையை, சிகிச்சைகளுக்காக தாம் பொறுப்பேற்றுக் கொண்டதாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வேட்டையாடுவோரினால் இந்த கம்பி கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுத்தை கம்பிகளுடன், போபத்தலாவ அரச விளை நிலத்தின் கிழக்கு பகுதியிலுள்ள உத்தியோகப்பூர்வ வீடுகளுக்கு மேல் வீழ்ந்திருந்த நிலையில், மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சுமார் 6 அடி நீளமான 9 முதல் 10 வயது மதிக்கத்தக்க மலையக பகுதிக்கு உரித்தான சிறுத்தையொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சிறுத்தையின் உடலில் பாரிய காயங்கள் காணப்படுவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வனவிலங்கு திணைக்களத்தின் மிருக வைத்திய அதிகாரிகள், அக்கரபத்தனை பொலிஸ் அதிகாரிகள் இணைந்து, சிறுத்தையை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுத்தை, சிகிச்சைகளுக்காக நுவரெலியா மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

போபத்தலாவ அரசாங்கத்திற்கு சொந்தமான வனப் பகுதியில் மான் மற்றும் பன்றிகளை வேட்டையாடுவதற்காக வேட்டையாளர்களினால் இந்த கம்பி கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த கம்பியிலேயே சிறுத்தை சிக்குண்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

Popular

More like this
Related

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும்...

சுரேஷ் சலேயின் ரிட் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச்...

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும்!

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி...

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...