சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு | மரங்களுடன் ஒருவர் கைது

Date:

சட்டவிரோதமான முறையில் அரிமரங்களை கடத்திச்சென்ற நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த பொலிசார்
நேற்று (25) மாலை கோதண்ட நொச்சிகுளம் காட்டுப்பகுதியில் இருந்து கூமாங்குளம் நோக்கி சட்டவிரோதமான முறையில் மரங்கள் கடத்தப்படுவதாக ஈச்சங்குளம் இராணுவத்திற்கு கிடைத்த இரகசிய தகவலிற்கமைய அப்பகுதிக்கு சென்ற ஈச்சங்குளம் இராணுவத்தினர் அம்மிவைத்தான் பகுதியில் வைத்து நூதனமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்ட நபரை வாகனத்துடன் கைது செய்து ஈச்சங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த மரக்கடத்தலில் வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யபட்டதுடன் பட்டா ரக வாகனம் ஒன்றும் 15 அடி நீளமுடைய 15 அரி மரங்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...