நள்ளிரவில் வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் மூவர் கைது

Date:

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வைத்திய தம்பதிகளின் வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் தாக்கியதில் வைத்தியர்களான கணவனும், மனைவியும் காயமடைந்து   வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று 01.03.2021 அன்று இடம்பெற்றிருந்தது.
வவுனியா, வைரவபுளியங்குளம், 6 ஆம் ஒழுங்கையிலுள்ள வைத்தியரின் வீட்டிற்கு 01.03.2020 அன்று  அதிகாலை 12.30 மணியளவில் வீடுபுகுந்த நான்கு பேர் கொண்ட இனந்தெரியாத நபர்கள், உறங்கி கொண்டிருந்த வைத்தியர் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் மீது கம்பியினால் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வீட்டில் இருந்த அவர்கள் இருவரினதும் கைத்தொலைபேசி, பேஸ், மோட்டார் சைக்கிள் திறப்பு, கைக்கடிகாரம், சீசீரீவி வீடியோ சேமிப்பு பெட்டகம் என்பவற்றை எடுத்து சென்றுள்ளதுடன் வீட்டில் இருந்த தொலைகாட்சி, சீசீரிவி என்பவற்றையும் அடித்து சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்னளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வந்ததில் நேற்றைய தினம் குறித்த சம்பவத்துடன் தாெடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா நிருபர் 

Popular

More like this
Related

சலேவின் மருத்துவ அறிக்கை குறித்து நீதிமன்ற தீர்ப்பு

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் கொழும்பு தேசிய...

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2027 ஆம் நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடவும், அதனைத்...

சோதனையிலிருந்து சாதனைக்கு..; MDC-யின் சாதனைப் பயணம்1

-எழுதியவர். ஆர்ஸ் ஷித்தீக் கல்வி, மனஉறுதி மற்றும் சமூக முன்னேற்றத்தின் இரண்டு ஆண்டுகள்...

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்; முடங்கியது மாட்டு இறைச்சி வணிகம்.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில், டாங்ரா (Tangra) பகுதியில்...