அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் ஏழாவது பொதுக்கூட்டம்

Date:

அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் ஏழாவது பொதுக்கூட்டம் கல்முனைய பிரதேசத்தில்,ஒன்றியத்தின் தலைவர் அஹ்மத் ஸாதிக் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் செயற்குழு அங்கத்தவர்கள், முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர்கள்,பெண்கள் பிரிவின் தலைவிகள், பிரதிநிதிகள் மற்றும் இளங்கலைப் பட்டதாரிகள் அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் முதற்கட்டமாக அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தினால், கடந்த காலங்களில் முஸ்லிம் மஜ்லிஸ்கள் எதிர் நோக்கிய பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான தெளிவுகள் மற்றும் இப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அனைத்து பல்கலைக்கழகங்களிலுமுள்ள முஸ்லிம் மஜ்லிஸ்களாலும் செயற்படுத்த வேண்டிய வகையில் கொள்கை வகுத்து வெளியிடுவதாக கூறப்பட்ட விடயம் குறித்து இறுதிக் கட்டத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு இக்கொள்கையை மிக விரைவில் வெளியிடுவதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களின் இவ் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழுக்களின் அறிமுகமும், மஜ்லிஸ்களின் கடந்தகால செயற்பாடுகள்,தற்காலத்தில் (கொவிட்-19 காலப்பகுதியில்) மஜ்லிஸ்கள் எதிர்நோக்கும் சவால்கள் எதிர்கால நடவடிக்கைகள், எதிர் வரும் ரமழான் மற்றும் பல்கலைக்கழகங்களை மீளத்திறத்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

கடந்த காலங்களில் AUMSAவானது பிராந்திய ரீதியான அபிவிருத்திகளை கருத்திற் கொண்டு செயற்படும் எனக்கூறியதன் பிரகாரம் இப் பொதுக்கூட்டம் கிழக்குப் பிராந்தியத்தில் நடைபெற்றது. அந்த வகையில், கிழக்குப் பிராந்தியத்திலுள்ள மஜ்லிஸ்களின் தலைவர்களும், பிரதிநிதிகளும், இப் பிராந்திய இளங்கலை பட்டதாரி அமைப்புக்களின் முக்கிய நிர்வாக உறுப்பினர்களும் இதில் பங்குபற்றினர். இவர்களுடன் கலந்தாலோசித்ததற்கமைய பிரச்சினைகள் இனங்காணப்பட்டு இப் பிராந்தியத்தின் முன்னேற்றத்திகான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அவர்களது எதிர் கால வெற்றிக்கு AUMSA பங்களிப்பினை வழங்கும்.

இறுதியாக அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் ஒன்றியத்தின் நடைபெறவிருக்கும் வருடாந்த பொதுக்கூட்டம் (2021) தொடர்பாகவும், பிரதானமாக, AUMSAவின் யாப்பில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசனைகள் பெறப்பட்டதோடு முக்கியமான முடிவுகளும் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து AUMSAவின் நிர்வாக அங்கத்தவர்கள், ஏனைய இளங்கலை பட்டதாரிகள் அனைவருக்கும் AUMSAவின் நிர்வாகம் சார்பாக எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Popular

More like this
Related

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் 3ஆவது ரந்தோலி பெரஹெரா நாளை: சிறப்புப் போக்குவரத்து திட்டம் அறிவிப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர திருவிழாவின்...

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 21 மனுக்கள் தாக்கல்!

அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர்...

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ்!

அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways), மெல்போர்ன் – கொழும்பு இடையிலான...

எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% ஆக வீழ்ச்சி

நாட்டில் அநேகமான பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக சுமார் 74...