மாற்றங்களை எதிர்நோக்கும் கொழும்பு மாநகரம்

Date:

இலங்கையின் வர்த்தக கேந்திர மையமான தலைநகர் கொழும்பு பாரிய மாற்றங்களுக்கு உள்ளாக இருப்பதாக இன்று வெளியாகியுள்ள சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி கொழும்பு கோட்டையில் இருக்கின்ற பிரதான பண்டைய மரபுகளை உள்ளடக்கிய கட்டிடங்களான பொலிஸ் தலைமையகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு அலுவலகம் என்பன வேறு இடங்களுக்கு மாற்றப்பட உள்ளன. இந்த இரண்டு கட்டிடங்களும் பண்டைய மரபுரிமையை
பேணி சுற்றுலா பயணிகள் விஜயம் செய்யும் அழகிய பிரதேசமாக மாற்றப்பட உள்ளன .

நகர அபிவிருத்தி அதிகார சபை இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சின் செயலாளர் நிமால் பெரேராவை மேற்கோள்காட்டி இன்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும்
துறைமுக நகரம் புதிய நகரமாக இருக்கும்.

அதேவேளை அதனை அண்டிய பிரதேசங்களான கொழும்பு கோட்டை பிரதேசத்தின் முக்கிய இடங்கள் மரபுரிமை பிரதேசங்களாக மாற்றப்பட்டு அவை பேணப்பட உள்ளன. இங்குள்ள பல கட்டிடங்கள் பெரும்பாலும் 150 வருடங்கள் பழமையான கட்டிடங்களாக காணப்படுகின்றன. இவை உரிய முறையில் புனரமைக்கப்பட்டு அவற்றின் பண்டைய பெருமதி பயணப்பட்டு பாதுகாக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி கொழும்பு கோட்டை பிரதேசத்தில் இருக்கின்ற போலீஸ் தலைமையகம் ரத்மலானை அத்திடிய பிரதேசத்திற்கு மாற்றப்பட உள்ளது. அந்த பிரதேசத்தில் பொலிஸ் திணைக்களத்துக்கு சொந்தமான விரிவான காணிகள் உள்ளன. எனவே பொலிஸ் தலைமையகத்தை அங்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதேநேரம் வெளிவிவகார அமைச்சு கட்டிடம்
கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் அமைந்துள்ள பெளத்தாலோக மாவத்தை பிரதேசத்திற்கு மாற்றப்பட உள்ளது .

கைத்தொழில் தொழில்நுட்ப பிரதேசம் மாலபேயில் ஒரு இடத்திற்கு மாற்றப்படவுள்ளது. இவ்வாறு கொழும்பு நகரில் கோட்டை பிரதேசத்தில் பல முக்கிய கட்டிடங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு அவை மரபுரிமை பேணப்பட்டு அழகிய பூங்காக்கள் உடன் கூடிய இடங்களாக மக்கள் நடமாடக் கூடிய இடங்களாக மாற்றப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...