அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பள்ளிவாசல் நிருவாகிகளுக்கான கொவிட்-19 விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று 2021.04.27 ஆம் திகதி பி.ப. 4.00 மணிக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் காரைதீவுப் பிரதேச செயலகத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். எம். ஜெலீலாவின் ஏற்பாட்டில் மாவடிப்பள்ளி புதிய ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் மெளலவி ஏ. சுபைதீன், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. எச். முகம்மது றிபாஸ் பிரதேச பொது சுகாதார பரிசோதகர், பிரதேசத்திற்கானகொரோனா தடுப்பு பொலிஸ் அதிகாரி மற்றும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.