இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு! ஏர் லிக்விட் எஸ் ஏவின் ஆக்சிஜன்இதற்கு தீர்வாகுமா?

Date:

உலகில் அதி கூடிய கொவிட் தொற்றாளர்கள் பதியப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.இதனால் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை கொண்ட கோவாக்ஸ் ரோல் அவுட் திட்டத்தின் மூலம் உலகில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு கொவிட் 19 தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கிய முதல் உயர் வருமான நாடுகளின் பட்டியல் இருக்கின்ற பிரான்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை பதியப்பட்டது.100,000க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை மவுரித்தேனியாவுக்கு அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.

எனவே தற்பொழுது கொவிட் தொற்றின் வீரியத்தின் உச்சத்தில் இருக்கின்ற இந்தியாவிற்கு ஆக்சிஜன்களை வழங்க பிரன்ஜ் முன்வந்துள்ளது.தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஏர் லிக்விட் எஸ் ஏ இந்தியாவிற்கான ஆக்சிஜனை விநியோகிக்க முன்வந்துள்ளது.இந்த நிறுவனம் ஏற்றுமதியை ஊக்குவிப்பதோடு மத்திய கிழக்கிலிருந்து அதிகளவான இறக்குமதியை எதிர்பார்ப்பதாக நிர்வாகத் துறை தலைவர் பிராங்கோயின் ஜாகோவ் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் ஆக்சிஜன்களுக்கான தேவை பத்து மடங்காக அதிகரித்துள்ளது எனவே நாட்டின் மொத்த உற்பத்தியில் 50%ற்கு அதிகமாகவே இவை எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...