வூஹான் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்து இது தொடர்பான அவதானத்தை உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்ததைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச அவர்களும் எதிர்க் கட்சியினரும் தொடர்ச்சியாக பல முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறினோம்.குறிப்பாக ,
01. மக்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட வேண்டும்.
02.சுகாதார அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அங்கிகளும் அது சார்ந்த ஏனைய ஏற்பாடுகளும் வழங்கப்பட வேண்டும்.
03.வென்டிலேட்டர்கள் தரவிக்கப்பட வேண்டும்.
04.ICU கட்டில்கள் புதிதாக உருவாக்கப்பட்டு வைத்தியசாலைக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.
05.சுகாதார தரப்பிற்கு மேலதிக கொடுப்பணவு வழங்கப்பட வேண்டும்.
போன்ற விடயங்களை முன்வைத்தோம். அப்போது பல அமைச்சர்கள் நகைப்பாகப் பார்த்னர்.
இலங்கையில் முதலாம் தொற்று ஏற்ப்பட்ட சீனப் பிரஜையை IDH வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கி சுகப்படுத்தி,வூஹான் பிரதேசத்திலிருந்து அங்குள்ள நமது நாட்டுப் பிரஜைகளை தனி விமானம் மூலம் வரவழைத்து ஊடக நாடகம் ஆடினர். பின்னர் வெளிநாட்டுத் தொழிலாளிகளை மீள அழைத்து வருவம் நடவடிக்கைகளை முற்றாக கைவிட்டு சில வியாபார கும்பலின் தேவைக்காக வர்த்தக நோக்கில் அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்கள் சிரமங்களுடன் உழைத்த பணத்தில் ஒருவருக்கு மூன்ரறை இலட்சங்கள் வீதம் செலவழித்து நாட்டிற்கு வரும் நிலை ஏற்பட்டது. கொரோனாவிற்கும் மத்தியில் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடினர்.
இவற்றுக்கு குறிப்பிட்ட அமைச்சர் முட்டி போட்டு தீர்வு தேட ஆரம்பித்தனர். தொடர்ந்து சுகாதாரத்துறைக்குப் பெறுப்பாகவுள்ள நான்கு அமைச்சர்களும் தம்பிக்கவின் பாணங்களை அருந்தினர். இதுவும் ஊடக நாடகமே ஆகும் .இன்று(29) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர், வைத்தியர் காவிந்த ஜயவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
தடுப்பூசி விடயத்தில் இந்தியா வழங்கிய இலவச எண்ணிக்கையையும் முதல் கட்டமாக முன்னனி செயல்பாட்டில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறினோம். முதலாம் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸை சுகாதார தரப்பிற்கே வழங்கும் பட்சத்தில் சுகாதார தரப்பு உறுதியாக ஆரோக்கியமாக செயற்படுவர்.பின்னர் முன்னுரிமை அடிப்படையில் ஏனையோருக்கு வழங்கியிருக்கலாம்.அசாதாரண நிலைகள் ஏற்ப்பட்டாலும் சுகாதாரத் துறை வினைதிறனுடன் செயற்படும்.ஆனால் இவற்றைப் பொருட்படுத்தாது 10 இலட்சம் மக்களுக்கு இது வரை கொவிஷிலிட் தடுப்பூசிகளை வழங்கியுள்ளனர்.இன்று இரண்டாம் கட்ட டோஸிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது.குறிப்பட்ட காலப்பகுதிக்குள் இரண்டாம் கட்ட தடுப்பூசியை ஏற்ற வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.இந்த விடயங்களில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.மனித உயிர்களுடன் விளையாட வேண்டாம்.குறிப்பிட்ட முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கியவர்களுக்கு தேவைப்படும் இரண்டாம் கட்ட கொவிஷிலிட் தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கையிருப்பிலுள்ள மூன்று இலட்சங்களும் சகலருக்கும் பேதாது.தடுப்பூசி தான் தீர்வு என்று தற்போது அரசாங்கம் கூறுகிறது.ஆரம்பத்தில் 30 வயதிற்கு மேற்ப்பட்டவர்களுக்கு என்று தான் கூறி வழங்கினார். பின்னர் 30 க்கு கீழ்ப்பட்டவர்களுக்கும் வழங்கினார்.சுகாதாரத் துறையினருக்கு முன்னுரிமை வழங்கி ஏனைய நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் வழங்க வேண்டும்.
நாட்டின் சகல மக்களுக்கும் தடுப்பூசி வழங்கும் செயன்முறைக்குள் அரசாங்கம் துரிதமாக கவனம் செலுத்த வேண்டும்.பிசிஆர் பரிசேதனைகளை அதிகரிக்க வேண்டும்.சிலர் கோவிட் 19 ஐ தோற்கடித்ததாக பொருமையாக கொழும்பில் 19 ஆம் இலக்கத்தை முன்னிலைப்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.
உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் அழைத்து வரப்பட்டு ஊடக நாடகம் ஆடினர்.அவுஸ்ரேலியாவில் விமான நிலையங்கள் இன்று வரை மூடப்பட்டுள்ளன.ஆனால் இந்தியாவிலிருந்து இலங்கையில் தனிமைப்படுத்தலுக்குட்படுபவர்களுக்கு இலங்கை அரசாங்கம் காப்புறுதி ஒன்றை வழங்கியுள்ளது.இது நாட்டிற்கு ஆபத்தானதாகும்.தனிமைப்படும் இந்தியர்களுக்கு அல்லது Transit முறையில் பயணிப்பவர்களில் சிலருக்கு தொற்று ஏற்படும் பட்சத்தில் காப்புறுதி ஊடாக அரச மருத்துவ மனைகளில் தான் சிகிச்சையளிக்க வேண்டும்.இவ்வாறு சிகிச்சையளிக்க முற்ப்பட்டால் இலங்கையர்களுக்கும் வைத்தியசாலை வசதிகள் இல்லாமல் போகும்.
இந்த வைரஸ் தாக்கம் ஏனைய அறிகுறிகளைக் காட்டாது நேரடியாகவ நியுமோனியா நோயை ஏற்ப்படுத்துகிறது.நாட்டிற்கு தேவையான ஒட்சிஜனைப் பெற வேண்டும்.அவற்றை பிற இடங்களுக்கு கொண்டு செல்லும் நகர்த்த முடியுமான சிலின்டர்கள்(Moveble) போதுமானளவு எங்களிடம் இருக்க வேண்டும்.இந்தியா முகம் கொடுத்த மிகப் பெரிய பிரச்சிணை நகர்த்த முடியுமான ஓட்சிஜன் சிலின்டர்கள் இல்லாமையாகும்.இவை குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி முன் ஏற்பாடுகளை பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும்.
தடுப்பூசிகளுக்காகவும் கோவிட் சிகிச்சைக்காகவும் அனுமதி வழங்கப்பட்ட தனியார் வைத்தியசாலைகள் இன்று வரை முழுமையாக நிரம்பியுள்ளதாக அறியக்கிடைக்கிறது.எனவே மூன்றாம் அலையை கட்டுப்படுத்த அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.