நாடு மீண்டும் முடக்கப்படுமா? | பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் தலைவர் உபுல் ரோஹன

Date:

ஆகக்குறைந்தது 4 நாட்களுக்கு நாடுமுழுவதும் முடக்க நிலையை அமுல்படுத்தி, வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் தலைவர் உபுல் ரோஹன கோரியுள்ளார்.

இது தொடர்பான கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்றுமாலை ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பிற்கு கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவினரும், தொற்றுநோயியல் விசேட வைத்தியர்களின் குழாமினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

தமது கோரிக்கைக்கு ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கப்பெறும் என உபுல் ரோஹன தெரிவித்தார்.

நாட்டில் தற்போது அதிகரிக்கும் கொரோனா பரவலை கருத்திற்கொண்டு பொதுமக்கள் அவதானமாக செயற்படவேண்டும் என அவர் கோரியுள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...