வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தொண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் பொலிசார் இன்று கைதுசெய்துள்ளனர்.
தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளவில் புதையல் தோன்டப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்றையதினம் அதிகாலை குறித்தபகுதிக்கு சென்ற பொலிசார் நிலத்தை தோண்டிக்கொண்டிருந்த இருபிக்குமார் உட்பட 11 பேரை கைதுசெய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டதுடன்,2 கார்கள் மற்றும் முச்சக்கரவண்டியையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்,
கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆயர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.