திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை மற்றும் நாமல்வத்த கிராமங்களில் ஏப்ரல் 15 ஆம் திகதி உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
Muslim Aid இந்த ரமழானில் குறைந்தது 5000 குடும்பங்களை சென்றடையவும், ஒரு மாத நோன்பு காலம் நீடிக்கும் வரை குடும்பங்களுக்கு உணவுப் பொதிகளை வழங்க திட்டமிட்டுள்ளது. “Feed The Fasting” என்ற திட்டத்தின் மூலம் Muslim Aid இலங்கை நாட்டில் வறுமையினால் மிகவும் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சிக்கிறது.
Muslim aid Sri Lanka சர்வதேச அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனம் என்பது குறுப்பிடத்தக்கது.