உயிர்களை காக்க 164 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியை கோரும் UNICEF!

Date:

தெற்காசியாவில் தீவிரமாக பரவி வரும் கொவிட்-19 இலிருந்து உயிர்களை காக்க உதவுவதற்கு, ஒட்சிசன் மற்றும் பரிசோதனைப் பொருட்களை, மருத்துவ உபகரணங்கள், தனிநபர் பாதுகாப்பு கருவிகளை, தொற்று பரவலை தடுக்கும், மற்றும் கட்டுப்படுத்தும் கருவிகளை கொள்வனவு செய்வதற்கும் 164 மில்லியன் அமெரிக்க டொலர்கள் UNICEF இற்கு அவசரமாக தேவையாக இருக்கின்றது.

உலகளாவிய புதிய தொற்றுக்களில் பாதியளவானது சுமார் 2 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த பிராந்தியத்தில் பதிவாகின்றது. ஒவ்வொரு நொடியிலும் மூன்றுக்கும் மேற்பட்ட புதிய கொவிட்-19 நோய்மாறிகள் பதிவாகின்றன. பிராந்தியத்தில் உயிரிழப்பு வீதமும் துரிதமாக அதிகரித்து வருகின்றது. கொவிட்-19 காரணமாக ஒவ்வொரு நிமிடத்திற்கும் மூன்று பேர் வரையில் உயிரிழக்கின்றனர்.

கொவிட்-19இன் இந்த புதிய பரவலின் வேகமும், அளவும் உயிர் காக்கும் சிகிச்சையை வழங்கும் நாடுகளின் இயலுமையில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்துகின்றது´ என தெற்காசியாவுக்கான UNICEF இன் பிராந்தியப் பணிப்பாளர் ஜோர்ஜ் லார்யா-அட்ஜே தெரிவித்தார்.

 

வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளன, ஒட்சிசனுக்கான மற்றும் ஏனைய மருத்துவ சாதனங்களுக்கான பற்றாக்குறை உள்ளது, சுகாதார முறைமை உடைந்து நொறுங்கக் கூடிய ஆபத்து உள்ளது´ என அவர் மேலும் தெரிவித்தார். இந்த பெருந்தொற்றின் முதல் அலையின் போது, அத்தியாவசிய சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டமையின் காரணமாக தெற்காசியா முழுவதிலும் சுமார் 228,000 சிறுவர்களும், 110,000 தாய்மாரும் உயிரிழந்தனர். ´முதல் அலையை விட நான்கு மடங்கு பெரிய ஒரு பரவல் அளவை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். சிறுவர்களுக்கும், தாய்மாருக்குமான முக்கிய சுகாதார பராமரிப்பு சேவைகளை பேணும் அதேவேளை, கொவிட்- 19 இனைத் தடுப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் எம்மால் இயன்ற அனைத்தையும் நாம் செய்ய வேண்டும்´ என லார்யா-அட்ஜே மேலும் கூறினார்.

Popular

More like this
Related

முதல்வராக விஜய் பதவியேற்பு: சென்னையில் ராகுல் காந்தி!:

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று(மே 10) பதவியேற்கவுள்ள நிலையில்,...

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...