தமிழக தேர்தல் முடிவுகள் 2021 | ஜெயக்குமார் முதல் துரைமுருகன் வரை…! -வி.ஐ.பி வேட்பாளர்கள் பின்னடைவு

Date:

தொடர்ந்து பின் தங்கும் 4 அமைச்சர்கள்….!!

திருச்சி கிழக்கில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன், மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் பெஞ்சமின், ஆவடி தொகுதியில் போட்டியிடும் பாண்டியராஜன் மற்றும் ராயபுரத்தில் போட்டியிடும் ஜெயக்குமார் ஆகியோர் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பின்தங்கி வருகின்றனர்.

வி.ஐ.பி வேட்பாளர்கள் முன்னிலை விவரங்கள்!

ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் தொடர்ந்து பின்தங்கி வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இரா.மூர்த்தி கூடுதலாக 702 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். சிறிய வித்தியாசம் என்பதால் கடும் போட்டு நிலவுகிறது.

கோவில்பட்டி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனை விடவும், அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு 424 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இங்கும் வித்தியாசம் மிகச் சிறிய அளவு என்பதால் கடும் போட்டி நிலவுகிறது.

ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் சா.மு.நாசரை விடவும் 4,009 வாக்குகள் குறைவாக பெற்று அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான மஃபா பாண்டியராஜன் தொடர்ந்து பின்தங்கி வருகிறார்.

காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் அதிமுக வேட்பாளர் ராமுவை விடவும் 398 வாக்குகள் குறைவாக பெற்று பின்தங்கி வருகிறார். இங்கும் வித்தியாசம் மிகச் சிறிய அளவு என்பதால் தொடர்ந்து கடும் போட்டி நிலவுகிறது.

ராஜபாளையம் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை 1,909 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

அரவக்குறிச்சியில் அண்ணாமலை பின்னடைவு..!!

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, திமுக வேட்பாளர் இளங்கோவை விட 600 வாக்குகள் குறைவான நிலையில் பின்தங்குகிறார்.

திமுக முன்னிலை..!

தமிழகத்தில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 99 இடங்கள் பெற்று முன்னிலையில் இருக்கிறது.

திமுக கூட்டணி -99

அதிமுக கூட்டணி – 74

அமமுக கூட்டணி – 00

மநீம கூட்டணி – 01

நாதக – 00

நன்றி விகடன்

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...