பொடி லொசியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஆலோசனை!

Date:

பொடி லொசியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஆலோசனை!

கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினரான ஜனித் மதுசங்க எனும் பொடி லொசி என்பவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்குவதாக சட்டமா அதிபர் இன்று (20) மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பாதுகாப்பை உறுதி செய்யும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி பொடி லொசி தாக்கல் செய்த மனு இன்று (20) சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் காவலில் இருந்த சந்தேக நபர்கள் இருவர் இதற்கு முன்னர் வேறு பொலிஸ் பிரிவிற்கு மாற்றப்பட்ட பின்னர் விசாரணைகளுக்காக வௌியில் அழைத்து சென்ற நிலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்திருந்ததாக பொடி லொசி சார்ப்பில் நீதிமன்றல் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலை தனக்கும் ஏற்படுமோ என்ற அச்சம் தன்னுடைய கட்சிக்காரருக்கு ஏற்பட்டுள்ளதால் அவருடைய பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...