மேலும் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

Date:

நாட்டில் மேலும் 6 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,

மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுகள்.

மாத்தளை மாவட்டத்தின் ரத்தொட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடஹபுவிட கிராம சேவகர் பிரிவு.

கண்டி மாவட்டத்தின் கடுகன்னாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலகம்பாய கிராம சேவகர் பிரிவின் திப்புட்ட கிராம் மற்றும் கொஸ்கஸ்தென்ன கிராமம்.

புத்தளம் மாவட்டத்தின் கொஸ்வத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெத கிரிமெட்டியான கிராம சேவகர் பிரிவு.

மேற்குறிப்பிடப்பட்ட பிரதேங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை குருணாகல் மாவட்டத்தின் கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிகதலுபொத கிராம சேவகர் பிரிவுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

இலங்கையில் பாகிஸ்தானின் 79-வது சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாட்டம்!

இலங்கையிலுள்ள பாகிஸ்தான்  உயர்ஸ்தானிகராலயமும்,  பாகிஸ்தானிய சமூகத்தினரும் இணைந்து பாகிஸ்தானின் 79-வது சுதந்திர...

வறண்ட வானிலையால் 68,041 பேர் பாதிப்பு!

வறண்ட வானிலையால் 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசியப் பேரிடர் நிவாரணச் சேவைகள்...

எட்டு இலட்சம் பாடப்புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள...