இலங்கையில் இன்று காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் 2 பிரதேசங்கள் தனிமைப்படுத்தப் படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த கொத்மலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பனன்கம்மன கிராம உத்தியோகத்தர் பிரிவு இத்தருணம் முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருகோணமலை மாவட்டத்தின், திருகோணமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆனந்தகுளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள சுபத்ரா லங்கா மாவத்தை பிரதேசமும் தனிமைப்படுத்தப் படுவதாக அவர் தெரிவித்தார்.