இஸ்ரேல் தாக்குதலில் இன்று மேலும் 20க்கும் அதிகமானவர்கள் மரணம்!

Date:

காசா பிரதேசத்திலுள்ள ஷாட்டிஅகதிமுகாமில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல் காரணமாக 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நேற்று இரவு(14) இடம்பெற்றுள்ளது.

இன்று நண்பகல் வரை இந்த தாக்குதலில் சிக்குண்டு மரணமடைந்தவர்களின் சடலங்களை கண்டுபிடிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன .

இதுவரை குறைந்தபட்சம் பத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் எட்டு சடலங்கள் சிறுவர்கள் உடையது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன மேலும் பலர் இந்த விமானத் தாக்குதலில் சிக்குண்டு மரணம் அடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

 

தற்போது இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக ஷாட்டி அகதி முகாமுக்குள் தஞ்சம் புகுந்திருந்த மக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் விமானப்படையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதேவேளை மேட்குக்கரை பிரதேசத்தில் பலஸ்தீன மக்கள் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் வீதிகளில் இறங்கியுள்ளனர்.
தம்மை எதிர்கொண்டு வரும் யுத்த தாங்கிகளையும் முழு கவசம் அணிந்த படைவீரர்களையும் வெறும் கற்களை கொண்டு அவர்கள் எதிர்த்து நிற்கின்றனர். இன்று நண்பகள் கிடைத்துள்ள தகவல்களின்படி இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்ட 11 பலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம்  சுட்டுக் கொன்றுள்ளது .

Popular

More like this
Related

‘குர்ஆனின் வழியில் கருணை காட்டுங்கள்’; அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக அலி சப்ரி குரல்

நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரது கருணை,...

இரட்டையையாளர்களான மருத்துவத் துறை மாணிவிகள் இருவருக்கு ஐபேட் வழங்கி வைப்பு.

உலக முஸ்லிம் சமேலனம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) – இலங்கை அலுவலகத்தின்...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்கான தீவிர முயற்சி!

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை...

அனோஜன் வழக்கை உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை அரசு!

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன்...