உண்மையான தகவல்களை அரசாங்கம் மறைக்கிறதா?

Date:

நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களை விட மும்மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்க கூடும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

அவ்வாறானவர்களால் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நேற்று மூவாயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதற்கும் அதிகமான தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்க கூடும். 3,500 ஐ போல் மும்மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம். அவர்கள் மேலும் நோய் பரவ வழிவகுக்க கூடும். மக்களை வீட்டில் இருக்குமாறு கோரினால் மக்கள் அவ்வாறு நடந்துக்கொள்வதில்லை. வீதிகள் வெறுமையடைய வேண்டும். ஆகவே, தொற்றை தவிர்க்க வேண்டுமானால் தேவையான விடயங்களுக்கு மாத்திரம் மக்கள் வெளியில் செல்வது நல்லது´

இதேவேளை, சுகாதார அதிகாரிகளுக்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பது குறித்த சுற்று நிரூபம் குறித்து இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளேயிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், சுகாதார அமைச்சின் அரச பணியாளர்களுக்கு ஒழுக்க கட்டுப்பாடு இருப்பதாக கூறினார்.

மேலும் உண்மையான தகவல்களை அரசாங்கம் மறைப்பதாக ஒரு குற்றச்சாட்டும் உண்டல்லவா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, ´அதில் எந்தவித உண்மையும் இல்லை. உண்மையை மறைத்தால் நாமும் மறைந்து போவோம்´ எனவும் அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே பதில் அளித்துள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...