தாய் நாட்டுக்கு சேவை செய்வதே என்னுடைய ஆசையாகும்- சட்டமா அதிபர் தப்புலடி லிவேரா தெரிவிப்பு
சட்டமா அதிபர் தப்புலடி லிவேரா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.எனினும் அவர் அந்த பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தன்னை கனடாவின் உயர்ஸ்தானிகராக நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், எனினும் இந்நாட்டில் தங்கியிருந்து தொடர்ந்தும் பொது மக்களுக்கு சேவை புரிய தான் விருப்புவதாகவும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்தார்.