பொலிஸ் நிலையங்களுக்கு இரண்டு சுற்றறிக்கைகள் அனுப்பி வைப்பு

Date:

இலங்கையில் கொவிட் தொற்றின் மூன்றாவது அனர்த்த நிலையை கவனத்திற் கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கடந்த முதலாம் திகதி வெளியிட்ட புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக பொலிஸ் தலைமையகம், நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் இரண்டு விசேட சுற்றறிக்கைளை கடந்த 04 ஆம் திகதி அனுப்பி வைத்துள்ளது.

இதன்படி, புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக, வைபவங்களை நடத்துவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், இந்த தடை உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் தலைமையகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும் புதிய சுகாதார வழிகாட்டல்களின் மூலம் பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் வாடகை வாகனங்கள் தொடர்பாகவும் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறுகின்றவர்கள் தொடர்பாகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் முகக் கவசங்களை முறையாக அணியாதவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,570 ‘Smart Boardகள்’ வழங்க நடவடிக்கை: பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல கல்வி நவீனமயமாக்கல் திட்டங்களின் கீழ், நாடு...

இலங்கை – கத்தார் கூட்டுத் தொழிலாளர் குழு கூட்டம்: தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை!

இலங்கை மற்றும் கத்தார் நாடுகளுக்கு இடையிலான கூட்டுத் தொழிலாளர் குழுவின் அண்மைய...

மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை மீட்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை: பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளியான சிவராசா...

காலநிலை அதிர்வுகள் தீவிரம்; இலங்கையின் நீர் விற்பனைக்கானது அல்ல

-ரிஸா யெஹியா பொறியியலாளர். காலநிலை அதிர்வுகள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் நீர்வளத்தை...