இலங்கை அணியுடனான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது தகாத வார்த்தையை பிரயோகித்து பங்களாதேஷ் அணியின் தலைவர் தமீம் இக்பாலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் 10வது ஓவர் பந்து வீச்சின் போது ஆட்டமிழந்த தமிம் இக்பால் தகாத வார்த்தையை பிரயோகித்துள்ளார்.இதன் பின்னர் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதுடன் போட்டி கட்டணத்தில் இருந்து 15% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.