நாட்டில் மேலும் 1,782 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் 174,059 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (27) மேலும் 1,411 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 143,789 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் இதுவரை 1,298 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது