நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக சில ஆறுகளின் தாழ் நிலப்பகுதிகளில் வௌ்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அவதானம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வெள்ளத்தின் தீவிரம் மற்றும் ஆபத்து மழையின் தீவிரத்தை பொறுத்தது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அத்தனகலு ஓயா, களனி கங்கை, களு கங்கை, கிங் கங்கை மற்றும் நில்வளா கங்கா ஆகிய ஆறுகளுக்கு அண்மித்த பகுதிகளில் வௌ்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.