வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவையில் இன்று எடுக்கப்பட்ட தீர்மானம்

Date:

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் அல்லது இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஸும் தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை மற்றும் நிதி நிலை தொடர்பில் கவனம் செலுத்தி வாகன இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக அமைச்சரவையில் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதற்கமைய குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் அல்லது இறக்குமதி செய்வது தொடர்பில் இதற்கு முன்னதாக காணப்பட்ட திட்டத்தை அமைச்சரவை தீர்மானத்திற்கமைய தொடர்ந்து இடைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...